பயணங்கள் முடிவதில்லை
பாடங்கள் நிறைவதில்லை
படிபினைக்கும் குறைவுமில்லை
பட்டாலும் பயனுமில்லை
சுட்டாலும் உறைப்பதில்லை
கரை கண்டார் யாருமுண்டோ
கற்றதெல்லாம் விட்டாலே
வீடுபேறு கிட்டுமென்றால்
கற்பதும் கடப்பதும் எக்காலம் !
**********************************
பாடங்கள் நிறைவதில்லை
படிபினைக்கும் குறைவுமில்லை
பட்டாலும் பயனுமில்லை
சுட்டாலும் உறைப்பதில்லை
கற்றதே கையளவு எனில்
கரை கண்டார் யாருமுண்டோ
கற்றதெல்லாம் விட்டாலே
வீடுபேறு கிட்டுமென்றால்
கற்பதும் கடப்பதும் எக்காலம் !
**********************************
கண் பார்க்கும் ,செவி கேட்கும்
அதரம் உதிர்க்கும் சொற்களை
ஐம் புலனும் அதன் வேலையில்
செவ்வனவே செய்திருந்தும்
சில நேரம் சில பொழுது
சுற்று புறம் ஸ்தம்பிக்க
பார்ப்பது எது பார்வையில் எது
கேட்பது எது உரைப்பது எது
என சித்தம் பிரம்மை வயப்பட
மனம் மருண்டு மயங்கி நிற்க...
ஒரு நொடியில் சுற்றில் ஓர் ஒலி
சுய உலகில் இழுத்து வர
எதை நோக்கிய பயணம் என்றறியா இது
இருந்தும் , இருப்பில் உள்ளதை பற்றி
இயைந்தே செல்லும் இது!
தீபா செண்பகம்
தீபா செண்பகம்