வாக்கும் நோக்கும்-2
ஆற்றின்ப வெள்ளமே -திருவாசகம்
இறைவனை, எம்பெருமானை அழைத்து மகிழ ,துதித்து மகிழ, கூவி அழைக்க ,ஆயிரம், ஆயிரம் நாமங்கள் உண்டு. ஆனாலும் மணிவாசகர் பெருமான், திருவாசகத்தின் முதல் பதிகம், சிவபுராணத்தில் ஓரிடத்தில் ஆற்றின்ப வெள்ளமே என்று அழைத்து மகிழ்ந்திருப்பார்.ஆற்றின்ப வெள்ளம் எப்படிப்பட்டது , அதனை உவமையாக்கி இறைவனை துதிக்க என்ன இருக்கிறது. அதன் விளக்கம் இவ்வாறாக வருகிறது.
முதலில் ஆறு என்பது இந்த உலகின் ஜீவ நாடி, எல்லா உயிர்களுக்கும் வடிவதானம் செய்யும் பிரபஞ்ச சக்தி பஞ்சபூதங்களில் ஒன்று. நீரின்றி அமையாது உலகு , ஆகவே இறைவன் உயிர்களுக்கு இதுபோன்று இன்றியமையாதவன். தாக்கம் தணிக்க நமக்கு நீர் உதவும், அதுபோல் பர உலக தரிசனம் காண, முக்தி எனும் பதம் அடைய நீராய் இருந்து தனிப்பவன் இறைவன்.
ஆறே இன்பம் தான், அதுபோல் இறைவனும், ஆனாலும் ஆற்றின்ப வெள்ளமே என அழைக்கின்றார். ஓடிக்கொண்டே இருக்கும் வெள்ளம் தான் ஆறு, அது கடந்த பாதை கடந்தது தான், அதில் ஓர் முறை நாம் மூழ்கி எழுந்தோம் ஆனால் அடுத்த முறை மூழ்கும் போது புது வெள்ளமே நம்மை அணைக்கும், புதிது, புதிதாய் ஓடிவந்து நம் அழுக்கை எல்லாம் களைந்து செல்லும். இறைவனும் அப்படித்தான், ஒவ்வரு முறை அவனை நினைந்துருகி நிற்கும் போதும் புதுமையாய் இன்பம் தருவான், அதுவும் பேரின்பம். எந்த நேரம் நினைந்துருகினாலும் புதியதோர் இன்பம். இறைவனை நினைந்த நெஞ்சில் அவன் அருளால் ஆணவம் எனும் அழுக்கு களையப்படும்.
ஆற்றின்ப வெள்ளத்தில் மூழ்கும் ஆனந்தம் அலாதி, அது தன்னை மறந்த ஆனந்தம், நாமும் ஓர் குழந்தையெனவே உள்ளம் துள்ள நிர்மலமான ஆனந்தத்தை அனுபவிக்கும் நிலை. மூழ்கும் நேரம் மூச்சு அடக்க வேண்டும்,உள்ளே மூழ்கும் கணம் தயக்கம் வருவதும் இயற்கை, அதை கடந்து லயித்து மூழ்க , அங்கேயே நின்றிருக்க ஆவல் வரும், நேரம் கடப்பதும் தெரியாது.
வற்றாத ஜீவ நதிகள் நிறைந்த நம் நாடு, தற்போது காய்ந்துப் போன நதிகள் தென்பட்டாலும்,மணல் கொள்ளையால் உரு மாறி நின்றாலும் என்றும் ஈரம் நிறைந்திருக்கும். இறை நம்பிக்கை என்பதை மறுத்து ஆயிரம் கருத்துக்கள் வந்தாலும், ஓடிவரும் ஆற்றின்ப வெள்ளத்தை நாம் அறியாது போனதே நமக்கான கேடு, ஆயினும் பாரதம் ஆண்டாண்டு காலமாய் ஆன்மீகம் தழைத்த பூமி ஆற்றின்ப வெள்ளத்தை நாம் என்றேனும் அனுபவித்தே உய்யவடைவோம் .