Thursday, 30 April 2015

ஊர்மிளை-5

ஊர்மிளை
மங்களம் பொங்கும் அலங்கார பூஷிதமாய் முன் நாள் விளங்கிய அயோத்தி
ஊர்மிளையின் முகம் போல் வாடிய ,துயரம் நிறைந்த அமைதியுடன் நின்றது
மாமன் அகம் சென்று,அண்ணன் பட்டாபிஷேக செய்தி,அவசரமாய் பெற்று 

நொடி நேரம் நில்லாது விரைந்த,அருந்தவ சீலன் பரதன் என்னும் பண்பினன்,
சாகேத்தின் அவல நிலை கண்டு,உள்ளம் பதறி,என்னவென அறிய மாளிகை 
செல்ல,கைகேயி ஆனந்தமாய் அவனுக்கு மணிமுடி என அறிவிக்க பதறி 

துடித்த தம்பி அவன் அண்ணன் எங்கே,தந்தை எங்கே,தம்பி எங்கே என வினவ,
நடந்ததை அறிந்த கைகேயி மைந்தன்,சீஎன அவளை உதறி,நீயும் ஓர் தாயோஎன 
வசை பாடி,தந்தையை காண விரைந்திட,அதற்க்கு முன்னே,தயரதர் ஆவி 

நிம்மதி நாடி வின்னுலகினை நோக்கி பறந்திருக்க,அய்யகோ என அவன் கதற,
மற்றொரு இடியென,ஈமக்கடனை செய்ய அவன் தந்தை அனுமதி மறுத்து,
வேறுலகம் சென்றனர் என அறிந்து பாவியானேன் என பரிதவித்து நிற்க 

கணவனை இழந்த ராணியரும்,மன்னனை இழந்த மக்களும் வாட,பாவியேன 
பெயர் கொண்டேனே என்று பரதனும்,பத்தியை பிரிந்த துக்கத்தில் ஊர்மிளையும் 
நிற்க,அரசாட்சியை மறுத்த தம்பி,அனைவரும் புடை சூழ கங்கையை தாண்டி 

பஞ்சவடியில் குடி புகுந்த ராமனை காண பயணம் செல்ல,மற்றொருமுறை 
தன மணாளனை கண்ணால்,காணும் பாக்கியமாவது பெறுவேன் என எண்ணமுற்று,
ராமனார் மனம் மாறினால் நன்றே என்ற நப்பாசையும் உற்று,உடன் சென்றால்.

பரதன் பெரும் கூட்டம் கொண்டு வருவதை அறிந்த இளவல் வெகுண்டு எழ 
அவன் பாசத்துடன் வருவான் பகைமை கொண்டு அன்று என விளக்கி அண்ணல் 
சாந்தப்படுத்த,வேதனை நிறைந்த அத்துணை முகங்களையும் கண்ட ராமர்,

அன்னைகள் அமங்கலமாய் இருப்பதை உணர்ந்து நடந்ததை அறிந்து அரற்ற,
குலகுரு,அனைவரையும் அமைதிபடுத்தி,ஈமக்கடன்களை ராமன் செய்ய,
அண்ணன் அவனது அரியாசனத்தில் அமர வேண்டும் என பரதன் வேண்ட

சொன்ன சொல் மாறும் குலம் அன்று ரகு குலம் என்று அண்ணல் மறுக்க
ஆகின் உம் பாதுகை அரியணை ஏறட்டும் என பரதன் யாசிக்க ஒரு முடிவு 
அங்கு வர,பேதை மனம் அறிந்த அன்னை ஜானகி,தங்கையை தன் நாயகனுடன் 

சிறிது நேரம் சேர்த்து வைத்து,அவர் தம் தனிமைக்கு அமைவிடம் தர அங்கு 
வந்த இளவல்,இடை மெலிந்து,கருத்து,சிறுத்து பிரிவாற்றல் கொடுமையால் 
பரிதாபமாய் பாதிப்பு உற்ற அவள் தன் மனையாளோ அன்றி அவள் நிழல் தானோ 

என ஐயமுற்று,அவளை ஏறெடுத்து  நோக்க,மனப் புயலில் சிக்குண்ட ஊர்மிளை 
தன் செம்பவள இதழ் பிரித்து,உன் கடமைக்கு குறுக்கே நான் ஒரு போதும் தடை 
சொல்லேன்,உன் பிரிவினையும் தான் சகித்து உமக்காய் வாழ்வேன் என சொல்ல,

தன் உயிரானவள் பட்ட வேதனையினை உணர்ந்த லட்சுமணன் ஓடிசென்று,
அவளை அள்ளி,உச்சிமோந்து,கட்டி அனைத்து,கண்ணே உன்னை ஒரு போதும் 
நான் அய்யமுறேன்,உன்னை என்னை போல் அறிவேன்,அதனாலே உன்னை 

நீங்கி அண்ணல் உடன் வரவும் துணிவு பெற்றேன்,உன்னை என் மனதுள்ளே 
ஒருகணமும் அகலாமல் நினைந்து ,அதனாலே உயிர் வாழ்வேன் உன் அன்பின் 
சக்தி என்னை முழுமையாய் திரும்ப உன்னிடம் சேர்க்கும் என உரைக்க 

சமயம் செல்கிறது,இந்த நிலையும், மாறும் சமயம் வந்தது தாங்கள் பிரிகின்ற 
நேரம் வந்தது என உணர்ந்து,ஆறுதல் உற்று,தேறுதல் உற்று தத் தம் வழி செல்ல,
பிரியமானவன் மனதுக்கு உகந்தவாறு மொழி சொன்ன மங்கை அயர்ந்து நின்றால்.


ஊர்மிளை-4

ஊர்மிளை

கைபிடித்த மங்கை ஒருபுறம் நிழல் உருவமாய் இளவல் ஒருபுறம் என 

ராமன் கானகம் புக அடியெடுத்து வைக்கையில் அயோத்தி நகரம் முழுதும் 
அரண்டு,புரண்டு அழுது  கண்ணீர் சிந்தியதை அகிலமே அறியும்.ஆனால் 

மங்கை ஒருத்தி மணாளனை பிரிந்து அதிர்ச்சி மாறாமல் அதிர்ந்த கதை 
அறியுமோ இவ்வுலகம்.ஆனந்தமாய் ஆதிசேசன் அவதாரத்தை நிறைக்க 
தாரமாய் வந்த தாரகை அவள் கண்ணீர் விடவும் மறந்த பிரிவாற்றாமை இது. 

கட்டியவன் கானகம் புறப்பட்ட தருணம் அது,ரணமாய் அவள் நெஞ்சில் பதிந்தது.
ராமனுடன்,தன மகனும் புறப்படட்டும் என சுமித்திரை சொல்ல அகம் மகிழ்ந்த 
லட்சுமணன்,தன மனையாளை உடன் அழைத்து செல்ல பிரியப்பட்டான் மனதில்,

ஆனால் அண்ணன் தன்னை உடன் வர இசைந்ததே,அரியது உர்மிளையும் என்றால் 
அவளையும் ஏன் வருத்துவது என எண்ணமுற்று,தன்னையும் தடை செய்வாரென 
பயந்து,தன் உயிரின் பாதியை அயோத்தியில் நிறுத்தி கடமை செய்ய துணிந்தான் 

மனம் ஆன நாள் கொண்டு ஒரு பொழுதும் பிரியாது இணைந்திருக்க இச்சை கொண்ட
இந்த செம்பவள மேனியால் இளையவன் மனையாள்  ஆனால் இன்று சிலையாய் 
உயிராய் மாறியவனை ஈரேழு ஆண்டுகள் கண்ணாலும் காணா நிலை வந்தது இன்று.


சிரவணன் பெற்றோர் இட்ட சாபம் மகனின் பிரிவால் உன் மரணம் என்று தயரதனுக்கு
இக்கொடிய சாபம் அது இன்று  இளங்கொடி மேனியாளை பற்றியதே என்ன  நியாயம்,
கைகேயி அவள் சுயநலமாய் பெற்ற வரம் 
ஊர்மிளைக்கு உற்றதே பெரும் சாபமாய் 


தமக்கை சீதை செய்த தவம் கணவனுடன் கானகம் சென்று விட்டால் அந்த பாக்கியமும் 
பெறவில்லை இந்த அபாக்கியவதியாய் ஆன ஊர்மிளை,என ஏங்கி தன்னை நொந்தணல்
தன் இயலாமை காரணமாய் அதையும் ஏற்றால் வேறு செய்யும் வகை ஏதும் இன்றியே. 

அன்னை நீ,தந்தை நீ,சொந்தம் நீ,பந்தம் நீ , உற்றானும் நீ,என சரண் புகுந்த உற்றவளை 
மறந்து தமையன் பின்னே சென்றான் இலக்குவன்.அவனே எல்லாம் என வந்த மாது செய்யும் செயல் இது என அறியாமல் பிரமை பிடித்து பேசும் மொழி அற்று நின்றால்.

தன்னில் பாதியாய் ஏற்ற பதியவன் விட்டு விலகும் போது,பேசும் மொழி மறந்து 

செயல் மறந்து கண்ணீர் உகுக்கவும் பயந்து,அவன் கடமை பாதையைஅடைக்காது
தனக்குள்ளே நொந்து சாந்தமாய் நின்றவள் மனதின் வேகம் தாங்காது வீழ்ந்தால் 

அவன் அகன்ற நேரம் மூர்ச்சையுற்று வீழ்ந்தால் நிலத்திலே சித்திரமாய் சித்தினி.
மாமியரும் சகியினரும் பதட்டமுற்று வைத்தியம் செய்து ஆறுதல் மொழியாய் 

அவன் விரைவில் வீடு திரும்ப வேண்டிய முயற்சிகள் எடுப்போம்  என இயம்ப

தமையனின்றி இந்த மனை அடியெடுத்து வைக்கான் தன் மணாளன் சொன்ன சொல் பிறழ்ந்து ஒருபோதும் திரும்பான் தன் தமக்கை மணாளன் என என்னமுற்றவள் 
சொல்பவர்கள் தன்னை தேற்றும் சமாதான மொழி தான் இது என அறியாதாவளோ 


தன் இதழை பிரித்து மென்னகை செய்தால்,அது அவளின் மனதினை பிரதிபலித்து வந்தது விரக்தி புன்னகையாய் மணாளன் இல்ல ஒருபொழுதே ஒரு யுகமாய் ஆகும் 
எனில்  ஈரேழு ஆண்டு கொடும் யுகமாய் செல்லும் தவ வாழ்க்கை வாழ தயாரானாள் 



ஊர்மிளை-3

ஊர்மிளை தன் மனம் கவர்ந்தவனின் கந்தர்வ தோற்றத்தை கண்டு பெருமையுடன் 
வைத்த விழி வைத்தபடி பார்த்து நிற்க,சமயம் இதுவன்று நாம் காத்திருக்க காத்திரு 
கண்மணியே காற்றாய் என் கடமை முடித்து உன் முன்னே வந்திடுவேன் என்றான்.

அண்ணலும் அவன் இளவலும் தயரதரை  பேட்டி  காண கைகேயி மாளிகை செல்ல
அவர் பத்தினிகள் இருவரும் தம் மாமியருடன் கூடி இன்பமாய் பேசி மகிந்திருக்க 
அடுத்த நாள் விடியலை ஆவலுடன் ஆனந்தமாய் எதிகொள்ள தயாரானது ரகுகுலம் 

தயரதரின் தர்ம பத்தினி கோசலை தன்  மருமகளாம் சீதைக்கு அறிவுரைகள் வழங்கினார் 
மகுடம் சூடும் மகாராணியின் குணநலன் யாது ,தர்மம் யாது என்று எடுத்துரைத்தால் 
பாராளும் பரந்தாமன் தன மனையாள் சீதையை சிரத்தையுடன் அதை செவியுற்றால்.

தயரதர் பெற்ற மக்கள் இருவரும் வந்தடைந்தனர் கொடும்சொல் செவிமடுக்க 

அரண்மனையில் தயரதர் பரிதவித்து அமர்திருந்த நிலையை கண்ட ராமன் 
தாமரை மலர்  ஒத்தமலர்ந்த  தந்தையின்  முகம்,முள் ஒன்று தைத்தார் போல் 
உள்ள நிலை என்ன வினவ அந்த முள்ளாய் உற்றவள் நானே என கைகேயிஉரைக்க 

அப்படியெனின்,பரசுவாய் தாம் மாற தயார் என லட்சுமணன் வேகமாய் சொல்ல,

ஆசையாய் தயரதரும் நோக்க அதன் பின்னே தேவாசுர போரில் உதவியதின் பேரில் 
நான் பெற்ற வரத்தினை இன்று நான் கைவரப் பெற்றேன் உன் தந்தையிடம் அதன் படி  

பரதன் நாடாளவும்,நீ சென்று ஈரேழு வருடங்கள் காடாளவும் வேண்டும் என  

கைகேயி உரைக்க அப்படியே அன்னையே! என ராமர் ஏற்க வெகுண்டான் இளவல்.
மாற்றான் தாயை,வாயில் வந்தபடி வசை பாட,அதனால் தந்தை சற்றே தேற!


நான் தக்க முறையில் உனக்கு நியாயம் செய்தேனில்லை புண்ணியனே நீ ஏன் 

எனக்கு மகனாய் வந்தவதரித்தாய் என தயரதர் பதறி  கேவஅவரையும் தேற்றி
இளவலை அமைதிபடுத்தி கோசலை மாளிகை வந்தடைந்தனர் இருவரும்.

வந்த மக்களில் மூத்தவன் முகத்தில்  அமைதியும் இளையவனிடம் சோகமும் 

ஒரு சேர கண்ட மங்கையர் யாவரும் கவலையுடன் அவர்கள்  முகம் நோக்க 
நடந்த விவரம் சொல்ல இது  உண்மையாயின் நான் கைகேயியிடம் யாசகமாய் 

ராமனை கேட்பேன் என கோசலை எழ,அதிகாரமாய் சொல் தமக்கை என சுமித்திரை 
அவளை வழி நடத்த,விதம் விதமாய் கைகேயியை அனைவரும் வசை பாட 

தக்கபடி உற்றவரை சமாதானம் செய்து தகப்பன் சொல்லே தாரக  மந்திரம் என 

கானகம் நோக்கி காடுமேடே இனி தம் வீடு என கடும் பயணம்  புறப்பட ஆயத்தம் ஆனார்.
ராமன் இருக்குமிடம் தனக்கு அயோத்தி என சீதை உடன் செல்ல வாதம் செய்தாள் 
ராமனுக்கு துணையாய்  இலக்குவன் உடன் செல்வான் என சுமித்திரை அறிவித்தாள் 

அகம் மகிழ்ந்தான் இலக்குவன் தனையனை பின் தொடர்வேன்  எந்த இக்கட்டும் 

எனை உற்ற பின்னரே எம் தமையனை அணுகும் என நல் சேவகனாய் சபதமேற்று   
 மணிமுடி தவிர்த்து மறஉரி தரித்து மூவரும் புறப்பட்டனர் கானகம் நோக்கி.

அங்கிருந்தவர் மனம் எல்லாம் ஆழ்ந்த துயரமதை  அனுபவிக்க அவரினும் மேலாக 

அங்கே ஒரு நங்கையின் இதயம் அது சூரானது சுக்கு நூறானது பிரிவு துயரம் எனும் 
கொடுமைக்கும் மேலான சோகமும் துயரமும் அவள் மனதை ஆட்கொண்டது 

Wednesday, 29 April 2015

தமிழ் தாலாட்டுப் பாடல்கள்.

தமிழ் தாலாட்டுப் பாடல்கள்.


தாலாட்டுப் பாடல்கள்,நம்முடன் இணைந்தவை,
பாடவே தெரியாத பெண்ணாக இருந்தாலும் தன பிள்ளைக்கு நாலு வார்த்தை பாடுவாள்,
இங்கு அது போல் உள்ள பாடல்கள் சில....இது ஒரு தொகுப்பு. என் வரிகள் அல்ல.

ஆராரோ அரிரரோ-பாடல் 1 

ஆராரோ ஆரிரரோ ....ஆராரோ ஆரிரரோ..
ஆராரோ ஆரிரரோ ....ஆராரோ ஆரிரரோ..

கண்ணே நீ உறங்கு கண்மணியே நீ உறங்கு 
பொன்னே நீ உறங்கு,பூ மரத்து வண்டுறங்கு.

ஆரடித்தார் நீ அழுதாய் அடித்தாரை சொல்லி அழு 
அடித்தாரை சொல்லி அழு , ஆக்கினைகள் செய்து வைப்போம்.

அத்தை அடித்தாரோ அள்ளி பூ செண்டாலே 
மாமன் அடித்தாரோ மல்லிகை பூ செண்டாலே 

மாமி அடித்தாரோ மருந்தூட்டும் கையாலே 
பாட்டி அடித்தாரோ பாலூட்டும் சங்காலே 

அவரமணி துவரமணி அரண்மனைக்கு ஏத்த  மணி 
துவமணி வேணுமுன்னு துறையே உன்னை பெற்றெடுத்தேன்.

அடித்தரை சொல்லி அழு ஆக்கினைகள் செய்து வைப்போம்.
வைதாரை சொல்லி அழு வக்கினைகள் செய்து வைப்போம்.

வெண்ணெயால் விளங்கு செய்து வெய்யிலிலே போட்டு வைப்போம் 
மண்ணால் விளங்கு செய்து தண்ணீரில் போட்டு வைப்போம்.

******************************************************************************************************************
ஆராரோ அரிரரோ-பாடல் 2
ஆராரோ அரிரரோ 
அரிரரோ அராரோ 

அரடிச்சு நீயழுதாய் 
கண்மணியே கண்ணுறங்கு 

கண்ணே யடிச்சரார் 
கற்பகத்தைத் தொட்டாரார் 
தொட்டாரைச் சொல்லியழு 
தோள் விலங்கு போட்டு வைப்போம் 
அடிச்சாரைச் சொல்லியழு 
ஆக்கினைகள் செய்து வைப்போம் 

மாமன் அடித்தானோ 
மல்லி பூ சென்டாலே 
அண்ணன் அடித்தானோ 
ஆவாரங் கொம்பாலே 
பாட்டி அடித்தாளோ 
பால் வடியும் கம்பாலே 

ஆராரோ அரிரரோ 
அரிரரோ அராரோ 

அரடிச்சு நீயழுதாய் 
கண்மணியே கண்ணுறங்கு!!!!!


**************************************
****************************************************************************
ஆராரோ அரிரரோ-பாடல் 3
ஆராரோ ஆரிரரோ
ஆறு ரண்டும் காவேரி,
காவேரி கரையிலயும்
காசி பதம் பெற்றவனே!
கண்ணே நீ கண்ணுறங்கு!
கண்மணியே நீ உறங்கு!
பச்சை இலுப்பை வெட்டி,
பவளக்கால் தொட்டிலிட்டு,
பவளக்கால் தொட்டிலிலே
பாலகனே நீ உறங்கு!
நானாட்ட நீ தூங்கு!
நாகமரம் தேரோட!
தேரு திரும்பி வர!
தேவ ரெல்லாம் கை யெடுக்க!
வண்டி திரும்பி வர!
வந்த பொண்கள் பந்தாட!
வாழப் பழ மேனி!
வைகாசி மாங்கனியே!
கொய்யாப் பழ மேனி! - நான் பெத்த
கொஞ்சி வரும் ரஞ்சிதமே!
வாசலிலே வன்னிமரம்!
வம்மிசமாம் செட்டி கொலம்!
செட்டி கொலம் பெத்தெடுத்த!
சீராளா நீ தூங்கு!
சித்திரப் பூ தொட்டிலிலே!
சீராளா நீ தூங்கு!
கொறத்தி கொறமாட!
கொறவ ரெல்லாம் வேதம் சொல்ல!
வேதஞ் சொல்லி வெளியே வர!
வெயிலேறி போகுதையா!
மாசி பொறக்கு மடா!
மாமன் குடி யீடேற!
தையி பொறக்குமடா - உங்க
தகப்பன் குடி யீடேற!
ஆராரோ ஆரிரரோ
கண்ணே நீ கண்ணுறங்கு!

******************************************************************************************************************
குட்டி குட்டி தாலாட்டுப் பாடல்கள் 

பாடல் 4
பச்சை இலுப்பை வெட்டி
பவளக்கால் தொட்டிலிட்டு
பவளக்கால் தொட்டிலிலே
பாலகனே நீயுறங்கு
கட்டிப் பசும் பொன்னே-கண்ணே நீ
சித்திரப் பூந்தொட்டிலிலே
சிரியம்மா சிரிச்சிடு-கண்ணே நீ
சித்திரப் பூந் தொட்டிலிலே !!!!!


******************************************************************************************************************பாடல் 5
உசந்த தலைப்பாவோ
‘உல்லாச வல்லவாட்டு’
நிறைந்த தலை வாசலிலே
வந்து நிற்பான் உன் மாமன்
தொட்டிலிட்ட நல்லம்மாள்
பட்டினியாப் போராண்டா
பட்டினியாய் போற மாமன்-உனக்கு
பரியம் கொண்டு வருவானோ?



******************************************************************************************************************பாடல் 6
பால் குடிக்கக் கிண்ணி,
பழந்திங்கச் சேணாடு
நெய் குடிக்கக் கிண்ணி,
முகம் பார்க்கக் கண்ணாடி
கொண்டைக்குக் குப்பி
கொண்டு வந்தான் தாய்மாமன்.

******************************************************************************************************************
பாடல் 7
ஆனை விற்கும் வர்த்தகராம்-உன் மாமன்
சேனைக் கெல்லாம் அதிகாரியாம்
சின்னண்ணன் வந்தானோ கண்ணே-உனக்கு
சின்னச் சட்டை கொடுத்தானோ உனக்கு
பட்டு ஜவுளிகளும் கண்ணே உனக்குப்
பல வர்ணச் சட்டைகளும்
பட்டுப் புடவைகளும் கண்ணே-உனக்கு
கட்டிக் கிடக் கொடுத்தானோ!
பொன்னால் எழுத்தாணியும்-கண்ணே உனக்கு
மின்னோலைப் புஸ்தகமும்
கன்னாரே! பின்னா ரேன்னு-கண்ணே
கவிகளையும் கொடுத்தானோ !

******************************************************************************************************************
பாடல் 8
ஐரை மீனும், ஆரமீனும்-கண்ணே
அம்புட்டுதாம் அப்பனுக்கு
வாளை மீனும், வழலை மீனும்-கண்ணாட்டி
விதம்விதமா அம்புட்டிச்சாம்,
அரண்மனைக்கு ஆயிரமாம்
ஆயிரமும் கொண்டுபோய்-கண்ணாட்டி
அப்பன் விற்று வீடுவர
அண்டை வீடும், அடுத்த வீடும்-கண்ணாட்டி
ஆச்சரியப் பட்டார்களாம்,
பிரித்த மீனு ஆயிரத்தில்-கண்ணே நான்
பிரியமாக ஆறெடுத்தேன்
அயலூரு சந்தையிலே-கண்ணே நான்
ஆறு மீனை விற்றுப் போட்டேன்.
அரைச் சவரன் கொண்டுபோய்-கண்ணே அதை
அரை மூடியாய்ச் செய்யச் சொன்னேன்.
அரை மூடியை அரைக்குப் போட்டு கண்ணே நான்
அழகு பார்த்தேன், ஆலத்தியிட்டு
அத்தை மாரும் அண்ணி மாரும்-கண்ணே உன்
அழகைப் பார்த்து அரண்டார்களே.
அத்திமரம் குத்தகையாம்
ஐந்துலட்சம் சம்பளமாம்
சாமத்தலை முழுக்காம்-உங்கப்பாவுக்குச்
சர்க்கார் உத்தியோகமாம்.
******************************************************************************************************************
பாடல் 9
சீராடும் எந்தன் செல்வமே 
வண்ண சிங்கார கண் உறங்கு
பார் ஆள வந்த யோகா 
செல்ல பார்த்திபா கண் உறங்கு
காண்ணே நீ கண் உறங்கு
கமல காண்ணே நீ கண் உறங்கு
பொன்னே நீ கண்ணுறங்கு 
வண்ண பூவே நீ கண்ணுறங்கு
******************************************************************************************************************
மார்கழி மாசத்திலேதான்-பாடல்-10
மார்கழி மாசத்திலேதான் - கண்ணே நீ
மாராசாவைப் பார்க்கையிலே
தைப் பொங்கல் காலத்திலே - கண்ணே நீ 
தயிரும், சோறும் திங்கையிலே
மாசி மாசக் கடைசியிலே - கண்ணே நீ 
மாமன் வீடு போகையிலே
பங்குனி மாசத்திலே - கண்ணே நீ 
பங்குச் சொத்தை வாங்கையிலே
சித்திரை மாசத் துவக்கத்திலே - கண்ணே நீ 
சீர் வரிசை வாங்கையிலே, 
வைகாசி மாசத்திலே - கண்ணே நீ 
வயலைச் சுற்றிப் பார்க்கையிலே
ஆனி மாசக் கடைசியிலே - கண்ணே நீ
அடியெடுத்து வைக்கையிலே
அகஸ்மாத்தா ஆவணியில் - கண்ணே நீ 
அரண்மனைக்குப் போகையிலே
ஐப்பசி மாசமெல்லாம் கண்ணே - நீ
அப்பன் வீடு தங்கையிலே
கார்த்திகை மாசத்திலும் - கண்ணே 
கடவுளுக்குக் கையெடடி.
******************************************************************************************************************
பாடல் -11
ஓடும் மான் கண்ணோ என் கண்ணே நீ கவரிமான் பெற்ற கண்ணோ
புள்ளி மான் கண்ணோ என் கண்ணே நீ புத்திமான் பெற்ற கண்ணோ
முத்தோ ரத்தினமோ என் கண்ணே நீ தூத்துக்குடி முத்தினமோ...
முல்லை மலரோ என் கண்ணே நீ அரும்புவிரியா தேன்மலரோ..
கண்ணே கண்ணுறங்கு கனியமுதே நீ உறங்கு.
******************************************************************************************************************

ராமனுக்காய் குலசேகர ஆழ்வார் பாடிய தாலாட்டு பாடல்-12
நாலாயிர திவா பிரபந்தத்திலிருந்து 

மன்னுபுகழ் கௌசலைதன் மணிவயிறு வாய்த்தவனே 
தென்னிலங்கை கோன்முடிகள் சிந்துவித்தாய் செம்பொன்சேர் 
கண்ணினன்மா மதில்புடைசூழ் கணபுரத்தென் கருமணியே 
என்னுடைய இன்னமுதே இராகவனே தாலேலோ 

புண்டரிக மலரதன்மேல் புவனியெல்லாம் படைத்தவனே 
திண்டிரலால் தாடகைதன் உரமுருவ சிலைவளைத்தாய் 
கண்டவர் தம் மனம்வழங்கும் கணபுரத்தென் கருமணியே 
எண்டிசையு மாலுடயாய் இராகவனே தாலேலோ 

கொங்குமலி கருங்குழலாள் கோசலைதன் குலமதலாய் 
தங்குபெரும் புகழ் ஜனகன் திருமருகா தாசரதீ 
கங்கையிலும் தீர்த்தமலி கணபுரத்தென் கருமணியே 
எங்கள்குல தின்னமுதே இராகவனே தாலேலோ 

தாமரைமேல் அயனவனைப் படைத்தவனே - தசரதன்றன்
மாமதலாய் மைதிலிதன் மணவாளா - வண்டினங்கள் 
காமரங்கல் இசைபாடும் கணபுரத்தென் கருமணியே 
ஏமருவும் சிலைவலவா இராகவனே தாலேலோ 

பாராளும் படர்செல்வம் பரதனம்பிக் கேயருளி 
ஆராவன் பிளையவனோ தருஞான மடைந்தவனே 
சீராளும் வரைமார்பா திருக்கண்ண புரத்தஅரசே 
தாராலும் நீன்முடிஎன் தாசரதீ thaalEl 

சுற்றமெல்லாம் பின்ன்தொடராத் தொல்கான மடைந்தவனே 
அற்றவர்கட் கருமருந்தே அயோத்தினகர்க் கதிபதியே 
கற்றவர்கள் தாம்வாழும் கணபுரத்தென் கருமணியே 
சிற்றவைதன் சொல்கொண்ட ஸ்ரீராமா தாலேலோ

ஆளிநிலைப் பாலகனா யன்ருலக முன்டவனே 
வாளியைகொன் ரரசிலைய வானரத்துக் களித்தவனே 
காலின்மணி கரையலைக்கும் கணபுரத்தென் கருமணியே 
ஆளினகர்க் கதிபதியே அயோத்திமனே தாலேலோ 

மலையதனா லனைகட்டி மதிளிலங்கை யழித்தவனே 
அலைகடலைக் கடைந்தமரார்க் கமுதருளிச் செய்தவனே
கலைவளவர் தாம்வாழும் கணபுரத்தென் கருமணியே 
சிலைவலவா சேவகனே ஸ்ரீராமா தாலேலோ

தளையவிழும் நறுங்குன்சித் தயரதன்றன் குலமதலாய் 
வளையவொரு சிலையதனால் மதிளிலங்கை யழித்தவனே 
களைகழுநீர் மருங்கலரும் கணபுரத்தென் கருமணியே 
இளையவர்கட் கருளுடையாய் இராகவனே தாலேலோ

தேவரையும் அசுரரையும் திசைகளையும் படைத்தவனே 
யாவரும்வன் தடிவனங்க அரங்கநகர்த் துயின்றவனே 
காவிரிநல் நதிபாயும் கணபுரத்தென் கருமணியே 
எவரிவேனி சிலைவலவா இராகவனே தாலேலோ 

கன்னிநன்மா மதில்புடைசூழ் கணபுரத்தென் காகுத்தன் 
தன்னடிமேல் தாலேலோ என்றுரைத்த தமிழ்மாலை 
கொள்னவிலும் வேல்வலவன் குடைக்குலசே கரன்சொன்ன 
பன்னியநூல் பத்தும்வல்லார் பாங்காய பத்தர்களே

Monday, 27 April 2015

ஊர்மிளை-2


சாகேத் நகரம்,பரந்த பாரத தேசத்தின் தலை நகரமாய்
புண்ணிய ராமனின் பிறப்பிடம் என்ற பெருமை கொண்டதாய்

சகல கலைகளும் செல்வங்களும் வளங்களும் பெற்றதாய்
சிறந்து விளங்கும் விண்ணோரும் வியக்கும் உன்னத நகரம்!

அயோத்தி நகரம் அன்று பூர்ண அலங்கார பூஷிதையாய் திகழ்ந்தது
நகர மக்கள் என்றும் காணா ஆனந்தம் நிறைந்து மலர்ந்திருந்தனர்

இளவல் என்ற சொல்லுக்கு விசேச அர்த்தம் தந்தவன் வீர லட்சுமணன்
தன் மாளிகையில் கோலமயில் ஊர்மிளையின் மஞ்சத்தில் இருந்து 

தான் கண்ட காட்சிகளை பகிர்ந்து நாளை நிகழும் நிகழ்வதனை 
பட்டாபிஷேகம் ஏற்கும் கோமகனை புகழ்ந்து  இந்நாடு செய்த 

பாக்கியத்தை போற்றி ரகுவம்சம் நீதி நெறி தனை புகழ்ந்து அத்தோடு


நடுநடுவே தன் அங்கமென வந்தவளின் பார்வையில் நிலை கொண்டு

ஒருவர் மாறி மற்றொருவர் பரிகசித்து கொஞ்சுமொழிகளில் பேசி 


அந்தி சாயும் பொழுதில் சகோதரர்களை சந்திக்க வென சகியிடம் 

பிரியாவிடை பெற்று பிரிந்தான்  ஊர்மிளையின் பதியாய் மண்ணுலகில் 
வந்த ஆதிசேசன் அவன் வீர ரூபத்தை பார்த்து மகிழ்ந்து நின்றனள் மாது.


ஊர்மிளை-1

ஊர்மிளை .

ரகுகுலத்தில் ஓர் இளவரசி,
குலமகளாய் தன் வாழ்வினை வாழ 
இக்ஷவாகு வம்சம்  வந்த எழிலரசி.
ஜனகனின் மகளாய் அவதரித்தாள்,
ஜானகியின் தங்கையாய் வடிவெடுத்தாள்.

ராமனின் காவியத்தில் இவளொரு பாவை,
யாரொருவர்  பார்வையும் படாத பதுமை  
அண்ணல் ராமன்  சீதையை கைபிடிக்க 
தம்பி இலக்குவன் மணமுடித்தான் ஊர்மிளையை 

அழகினில் அவள் ஓர் ஆரணங்கு 

இளவலின் இயல்பறிந்த சீரணங்கு 
நடை பயிலும் அன்னம், 
இடை மெலிந்த தேவதை.
துடுக்கும்,துள்ளலும் கொண்டு 
துள்ளித் திரியும் தும்பி 
தூரிகையால் சிந்தையில் நின்றதை 
சித்திரமாய்  வரைந்திடும் சித்தினி,


ராமனுக்கு பட்டம் கட்ட நாள் குறித்தனர்.
வண்ண பட்டு சீலைதனில்,வண்ணம் குழைத்து 
வடிவாய் 
ராமனும்,சீதையும் பட்டத்தில் எழிலோடு அமர்ந்திருக்க
அருகேஅவள்மன்னவன் இலக்குவன் நின்றிருக்க 
பரத சத்ருக்கனன் அருகே நின்றிருக்க 

தசரதரும் ராணியரும் மகிழ்ந்திருக்க 
இந்த மங்கை நல்லாள் 
தன் மணாளனை நோக்கியபடி 
மாடத்தில் அமர்ந்திருந்தாள்..

ரகுகுல குருவாம் வசிட்ட மகரிஷி
தன் கைகளினால் ரகு குல மனிமுடிதனை 
ராமனினின்,சிரத்தினில் சூட்ட 
அன்னையர் அகம் மகிழ,அரங்கம் அதிர 
விண்ணவர் வாழ்த்து வான் வரை முழங்க 


சித்திரம் தீட்டி,தன் மணாளனுடன் ரசித்திருந்தால் 
அவள் அருமை கை வண்ணமதை பார்த்த 
இலக்குவனும் பெருமை பொங்க  அவளை
அனைத்து  தன் பாராட்டை பகிர்ந்திருந்தான் 

இது ஒரு ஆனந்தமான தருணம் 
அவள் வாழ்வின் இன்ப தருணம் 
சிருங்காரமாய்  இருந்த இனிய தருணம் 
அவள் வாழ்விலும் அவள் நினைத்து 
மகிழ இருந்த ஓர் அரிய தருணம் !