மோகம் விடுத்த பக்தி பத முக்தி தரும்
முன் உதாரணமாய் வந்தான் ஓர் பக்தன்
புட்பதத்தன் எனும் நாமம் தரித்தவன்
கானம் இசைக்கும் கந்தர்வன் அவன்
கவிபாடி மகிழ்ந்திருக்கும் சிவபக்தன் -1
பாமாலை பாடி பரமனை பணிந்தாலும்
பூமாலை சூட்டி புளங்கிதம் அடைவான்
மாயமாய் மறையும் மந்திரம் அறிந்தவன்
கண்கட்டு வித்தை பயின்ற விண்ணவன்
தடை தாண்டி தாவி இறங்கும் கந்தர்வன் -2
பல விதமாய் வண்ண மலர் கொண்டு
மகேசனுக்கு சூட்டி மகிழ்வானவன் அது
மாற்றான் தோட்டத்து மலரென்றாலும்
மாற்று கருத்து கொண்டானில்லை மதி
மயங்கி மோகம் கொண்டு கொய்வான் அதை -3
பக்தி மேல் கொண்ட மோகம் அது அவனை
பற்றிவந்த பல நாள் நோய் ஆனது மலரென்று
கண்டால் போதும் கொய்து அபிசேகிப்பான்
அப்பனுக்கு அன்றொருநாள் சித்ரரதன் என்ற
மன்னவன் மாளிகை கடந்து செல்கையில் -4
அழகிய வண்ண மலர்சோலை கண்ணில் பட
தன்னையும் மீறி தரை இறங்கி இயன்றவரை
அரியவகை மலர்களை அள்ளிக்கொண்டான்
மணக்கும் மலர் கொண்டு மனதில் மகிழ்வுடன்
மங்கைபாகருக்கு சூட்டி மயங்கி நின்றான் -5
மன்னவனும் பக்தி நெறி தவறா சிவபக்தன்
சிவபூஜை செய்ய கரடியாய் வந்த கந்தர்வன்
பற்றி அறியாமல் காவலரை கடிந்து காவலை
அதிகரிக்க அன்றும் அபகரணம் ஆனது மலர்கள்
வகைஅறியா மன்னவன் விழித்து நின்றான் பின் -6
களவை கையுடன் பிடிக்க எண்ணி கவனமாய்
தோட்டத்தில் வில்வ இலைகளை விரித்தான்
வில்வம் விஸ்வநாதன் விருப்ப இலை அதை
மிதித்தால் ஓசை வரும் ஒருபுறம் மிதித்தவன்
ஆசை வீணாகும் மறுபுறம் என காத்திருந்தான் -7
வினை அறியா கந்தர்வன் மற்றவர் பார்வை மயக்கி
பரவி இருந்த வில்வ இலை கருத்தில் கொள்ளாமல்
மலர்களை கொள்ளை கொள்ளும் கொள்கையுடன்
பாதம் வைக்க ஓசை எழுப்பியது வில்வம் ஓர்புறம்
சமாதி இருந்த சதாசிவம் சற்றே கலைந்தது மறு புறம்.-8
நாயன்மார் நாயகர் நயனம் திறந்தார் அக்கணமே
வில்வம் பரப்பிய மன்னவனும்,அதில் அடி வைத்த
கந்தர்வனும் காட்சியில் தோன்ற மனிதனை மன்னித்து
விண்ணவன் சக்தி எல்லாம் விரையம் ஆக சபித்தார்
மாயம் கைவிட்ட கந்தர்வன் சித்ரரதன் கைதி ஆனான் -9

No comments:
Post a Comment