Thursday, 18 June 2015

தூக்கணாங்குருவி கூடு

 கவின் மிகு கலைஞன்
சிறந்த வடிவமைப்பாளன் 
 தேர்ந்த நெசவாளன் 
ஆற்றல் மிகுந்தவன் 
தூக்கணாங்குருவி

முள் நிறைந்த மரம் 
முதிர்ந்த  சுரைக்காய் 
சாத்தியமோ என நோக்க 
அது ஒரு பறவை  கூடு 
கிளையில் தொங்கும் 
வாசல் வைத்த வீடு 

குழல் போல் உருண்டு 
பந்து போல்  பருத்தது 
அடியில் இரண்டு வாசல் 
உள்ளே எட்டிப் பார்க்க 
பகுதியாய் பிரித்த அறைகள் 
வலையால் ஆனா தரை அவை 
முட்டை தாங்கி நிற்கும் சிறை 

நாரில் பின்னிய மாளிகை 
முழுதாய் ஒரு முழ உயரம் 
கலவி மனம் புரியவென 
ஆயத்தம் ஆனது கூடு 
ஜோடி கிடைத்தவுடன் 
ஆண் பறவை கட்டும் 
அழகிய மாளிகை இது 

அரை ஆயிரம் முறை 
அலையுமாம் இதை கட்ட 
 ஒரு அடிநீளம்  குறையா 
வைக்கோல்,கோரை நார்
என பார்த்து பதம் பிரித்து 
பாங்காய் கட்டிய கூடு  
இரவில் ஒளி தரவென 
களிமண் அப்பி அதில் 
மின்மினியை பொருத்தும் 

காற்றில் ஆடும் ஊஞ்சல் 
எனவே புழுக்கம் இருக்காது 
இத்தனையும் செய்த பின்னே 
தன்  பேடையை  அழைத்து வந்து 
ஒப்புதல் பெற காத்து நிற்கும் 
தலைவி சில மாறுதல் செய்து 
தலை அசைத்த பின்னே தான் 
புதுமனை புகு விழா  











No comments:

Post a Comment