Friday, 19 June 2015

ஹைக்கூ-1

ஹைக்கூ-1
ஹைக்கூ சில முயற்சிகள்.

1*ஆறுவது சினமாம் 
அடைக்காக்கப்பட்டது 
ஆத்திரம் எனும் நெருப்பில் 
*************************************
2*மனம் நொந்த மங்கைக்கு 
வானரம் தந்த மாமருந்து 
கணையாழி 
*************************************
3*பக்குவமாய் பதியமிட்டு 
வளர்த்த ரோஜா மலர்ந்தது 
மாற்றான் தோட்டத்தில் 
*************************************
4*புதுச் சட்டையில் புகுந்து 
அடுத்த சட்டை மாற்றும் வரை 
ஆயுள் 
*************************************
5*வெகு நேரப் போராட்டம் 
விரையமான செலவாணி 
வீண் வாதம் 
 *************************************
6*கமண்டலம் கவிழ்த்தது காக்கை 
கரை புரண்டோடியது நதியாய் 
காவிரி 
 **************************************
7*கூத்தனார் ஆனந்த கூத்தாட 
அருவியாய் குதித்த மங்கை 
குற்றாலம் 
*************************************
8*சிப்பிக்குள் சிறைவாசம் 
மகுடத்தில் அரங்கேற்றம் 
முத்து 
*************************************
9*இரண்டறக் கலந்த இருவகைக் காற்று 
இதுவன்றி அமையாது உலகு 
நீர் 
*************************************
10*வான் மழை  வழுவாது பெய்ய 
வானவர்க்கும் கையூட்டு 
வருண பூஜை
*************************************
11.எதை நோக்கிப் பயணம்
அறிய முயலும்
அறியாப் பயணம்
*************************************
12.முற்றுப் புள்ளி வைத்தாள்
முறையோ தொக்கி நின்றன
நயனங்கள்
*************************************
13.நித்திரைக்கு நிரல் விடுத்தால்
சொப்பணத்தில் வருவான்
அவன்
*************************************
14.தலைவி விடுத்த தூது
தந்தி மொழியாக்கியது
விழிநீர்
*************************************
15.உயிர் சுமந்த பெட்டகம்
கரையானாய்  புற்று
கதறுகிறது
*************************************
16.விழி மலர்த்தி நிலவை நோக்கி
மனம் பரப்பி மயக்கியது
மல்லிகைப் பந்தல்
*************************************
17.தொப்பை மறைந்து உடல் மெலிந்தது
தலை கணம் தாழாமல்
தலையணை
*************************************
18.தொட்டவர்க்கும் தொற்று நோயானது
போக்கை வாய் சிரிப்பு
காந்தி நோட்டு
*************************************
19.புலர்ந்தது பொழுது
கூவியது சேவல்
கன்னியாய் குமரி
*************************************
20.அவனி வலம் வந்தும்
அடையவில்லை கனி
பழமே நீ
*************************************
21 உடைத்து சிதறிய சிலம்பு 
கதறி வீழ்ந்த மன்னன்
காவியமானது
*************************************
22.இரகசியமாய்  செவி மடுத்தது
ஊருக்கே உரக்க சொன்னது
சங்கு 

No comments:

Post a Comment