நான் எனும் நான் ஏது
நீண்ட நாளாய் ஆகிவந்த கேள்வி தான் இது
நானதேது நீயதேது நடுவில் நின்றதேது என
சிவவாக்கியார் முதல் சிந்தனையாளர் வரை
வரையறுக்க முயன்ற வரிகளுக்கு சில வரிகள்
அருவாய் ,உருவாய்,அருஉருவாய் ஆண்டவன்
சூக்கமமாய் ,ஸ்தூலமாய் ,லிங்கமேனியாய் பதி
அவ்விதமே மூன்றும் முறையாய் கலந்தது பசு
இறைக்கும்,உயிர்க்கும் உள்ள தொடர்பு இதுபோல்
அருவாய், நான் எனும் உள்ளே குடிபுகும் உயிர்
உருவாய் பஞ்சபூத சேர்க்கையில் ஆனா உடம்பு
அதில் அருஉருவாய் அன்றுமுதல் ஆகிவந்த
லிங்கமேனியாய் மரபு வழி வந்த அணுக்கள்
தந்தையின் விந்தணு தாயின்கருவறை குடிபுகுந்து
வினை நிகழ்ந்து விந்தையாய் உருவாகும் அந்த நான்
தாயின் சாயலாய் அகமும் முகமும் முடியும் அவர்
தம் அன்னை வழி வரும் கவியும் அதில் தந்தை வழி
வரும் பிழையும் பாட்டன் வழி பரம்பரை கலையும் .
தந்தைவழி வந்த நடையும்,இடையும்,எடையும் அவர்
தம் தாயார் வழி பேசும் முறையும் தகப்பன் வழி பாட்டன்
தன் சொத்தாக மொழி புலமையும் என ஒவ்வொன்றும்
பரம்பரையாய் பலரிடம் இருந்து வரும் நோயும் என
மரபு வழியாய் ஒன்றின் மேல் ஒன்றாக தம் வண்ணம்
பதித்து பரம்பரை பெருக்கிவிட்டு செல்லும் மானிடர்
இதில் நான் எனும் நான் ஏது சொல்லுங்கள் பார்க்கலாம்

No comments:
Post a Comment