தசரதர் புத்திரர்களை பேட்டி கண்டு முனிவரை வணங்கி
அரண்மனை திரும்பினார் ஜனகர்,சுயம்வர ஏற்பாடுகளை
திருப்தியுடன் நோக்கி விட்டு,தன் மகள்களுடன் உரையாட
அந்தப் புறம் அடைந்தார்.அங்கே அமைதியுடன் பதுமையாய்
கண்களில் யோசனை படர மையல் கொண்ட மைவிழியாய்
மைதிலி அமர்ந்திருக்க அவளுக்கு அருகே ஆர்பாட்டமாய்
ஊர்மிளை மாளிகையை இரண்டாக செய்துகொண்டிருந்தாள்
அரசியும் சகோதரன் மகள்களும் மற்ற அந்தபுர மகளிரும்
சூழ்ந்திருக்க சுயம்வரம் பற்றி கூடி பேசி மகிழ்ந்திருந்தனர்.-16
மறுநாள் மைவிழி மங்கையின் வதனம்தனில் குடி புகுந்து
தம் மேன்மையை உலகினுக்கு பறை சாட்டுவோம் என
வைர,வைடுரிய நகைகள் ஆனந்தமாய் மகிழ்ந்திருந்தன.
செல்வத் திருமகளை என்றும் பிரியாத வரம் பெற்றவை
நவரத்தினங்களும்,முத்துக்களும் ஆடை ஆபரணங்களும்
ஜனகர் தம் மகளை அதே அடையாளத்துடன் காணும் நாள்
இன்றே என எண்ணம் கொண்டு நாளை அவள் மற்றொருவன்
மனையாளாய் மாலை சூடியிருப்பாள் என்றும் நினைத்திருந்தார்
ஆசையுடன் உச்சி மோந்து அளவளாவி மகிழ்ந்திருந்தார்.-17
தந்தையுடன் உரையாடும்போதே அம்பிகை அடிபணிந்து
வந்த பொழுது தான் கண்ட மன்னவரின் முகம் நிழலாட
கண்ணுற்ற நேரமதில் தன் இதயம் இடம் மாறியதை
அறிந்த ஜானகி நீண்ட நாள் பிரிந்து தன் மன்னவனை
பிறவி கடந்து காண்பதை உணர்ந்தால்,அண்ணலும் நோக்கி
அவளும் நோக்கினாலும் அன்றைய தம் நிலை உணர்ந்து
தேகம் பிரிந்தது நினைவுகள் இணைந்தது,அதே நேரம்
ஜானகியுடன் உரையாடிய ஜனகரும் தசரத ராமனை
நினைவில் நிறுத்தி அவரவர் சிந்தையில் நின்றிருந்தனர் -18
ஜாமம் செல்வதை உணர்ந்த ஜனகர் மகளை வாஞ்சையுடன்
அனைத்து மகிழ்ந்து அவளை ஓய்வெடுக்க அனுப்பிவிட்டு
விட்டதை நோக்கி தம் வாழ்வின் பெரும் சுகமாய் பொறுப்பாய்
வந்த புவிமகளின் நினைவுகளில் மூழ்கி இருந்தார் தன் மகளின்
பதின் வருட வளர்ச்சியினையும் அந்த நாளிகை பொழுதினில்
ஒவ்வன்றாய் நினைவில் நிறுத்தி அகம் மகிழ்ந்து இருந்தார்.
அவளின் சுயம்வரம் சிவதனுசை மையமாய் கொண்டு நிகழும்.
இந்த வில்லை நான் ஏற்றி முறிப்பவனே சீதையின் நாயகன்
அந்த நாயகன் வரவேண்டும் என வேண்டி நித்திரை கொண்டார்.-19
சுயம் வரம் தினம் கோலாகாலமாய் விடிந்தது ஆரவாரமாய்
அனைத்து தேசத்து அரசகுமாரர்களும் வந்து சேர்ந்தனர்
தேவர்களும் கந்தவர்களும் அங்கே குழுமி இருந்தனர்
அரக்கர்களும் தம் வலிமைக்கு விடப்பட்ட சவால் என்றே
விரைந்து வந்திருந்தனர்.கைலாயத்திலிருந்து அம்மையப்பனும்
சத்தியலோகம் விட்டு நான்முகன் அவர் நாயகியும் அருவமாய்
அங்கே வந்திருந்தனர் பிரம்மரிஷிகளும் கவனிதிருன்தனர்.
விஷ்வாமித்திர முனிவர் தம் சீடர்களுடன் விருந்தினர் இடம்
அமர அதை கண்ட வைதேகி விக்கித்து வசம் இழந்து நின்றாள்-20
நடு நாயகமாய் திரிபுரம் எரித்த சிவனாரின் தனுசு கம்பீரமாய்
பலரின் ஆணவத்தை அழிக்கவென்றே நிறைந்திருக்க அதை
அறியாத பல மூடர்கள் தம்மை வலிமை கொண்டவன் என
பறை சாற்ற முன்னேற அசைக்கவும் முடியவில்லை வில்லை
ஆனால் ஆட்டம் கண்டது அவர் ஆதாரமாய் நின்ற ஆணவம்
சிலர் முயற்சிக்க,அதை கண்டு பலர் முயற்சி இன்றியே பயந்து ஓட
கடை கண்ணால் கண்ணுற்ற கன்னிகை ஆசுவாசமுற்றால்
இப்போது கவலைப்படும் முறை ஜனகரின் முறையானது.
சிவதனுசை தந்து ஈசனார் செய்யும் லீலை புரியாமல் போனது.-21
அரக்கர்கள் அடுத்து அரங்கம் ஏறி முயற்சிக்க தோல்வியை
தவிர மற்றவர் பெற்றது அவமானம் மட்டுமே சிலர் ஜனகரை
ஏசிச் செல்ல ராஜரிஷியாய் பக்குவம் அடைந்திருந்த மன்னவனும்
பதறிப் போனான் தந்தை ஜனகனாய் ஈசனாரை வேண்டிக் கொண்டான்
முனிவரின் மனதினுள் சென்று இறைவன் கட்டளை இட
தன் சீடனை நோக்கி சமிஞ்கை செய்தார் குருவின் கட்டளை
சிரமேற்கொண்ட ஸ்ரீராமர் அரங்கம் ஏற சீதையவள் மனதில்
அம்பிகையை வழிபட்டால் தாம் கணவரென வரித்த இந்த
கருத்தவரே இந்த வில்லை முறித்து என்னை ஏற்கவேண்டும் -22
அதே சாந்த முகத்துடனே சிவதனுசின் அருகே சென்ற
கோசலை மைந்தன் பணிவாக அதை வணங்கி நின்றார்
இது திரிபுரம் எரித்த வில்லின் பயன் அது முடிந்ததோ
அதனால் எமை சீதையுடன் சேர்ப்பிக்க எம் தங்கையுடன்
சேர்ந்து நீவீர் செய்த செய்கையோ என உள்ளத்தில் எண்ணி
இப்பிறவி அவதார நோக்கத்தின் ஒரு படியாய் தன் சகியுடன்
ப்ராணப் பிரியாளுடன் இணைய வென்றே எடுத்தார் வில்லை
சிவதனுசை விஷ்ணு அவதாரம் ஏந்திய பொழுதில் அதிர்ந்தது
அண்டம் நான் ஏற்றி அதை இரு கரம் தாங்கி முறித்தார் ராமர் -23
சிவதனுசு முறிந்த நேரம் அதிர்ந்த அண்டம் வெடித்தது
அதை முன்னே அறிந்த ஈசனார் சரி செய்யும் வேலையும்
மற்றவர் அறியாமல் செய்து முடித்தார்.சுயம்வர மண்டபம்
பிரமையில் இருந்து விடுபட நேரம் கொண்டது ,சீதையின்
கனவு மெய்பட்டது தாரை தாரையாய் கண்ணீர் இன்பமாய் வழிய
தந்தையை நோக்க ஜனகரின் கண்களிலோ ஆனந்த வெள்ளம்
தான் நினைத்த இளவரசன் உயர்குல மன்னவன் சர்வகுனாலன்
தம் மகள் கைத்தலம் பற்ற என புளங்காகிதம் அடைந்திருந்தார்
வரமாலை ஏந்தி அடிமேல் அடி வைத்து வந்தடைந்தாள் வைதேகி.-24

No comments:
Post a Comment