Thursday, 7 May 2015

ஜனனியின் ஜணனன் -5

ஜனனியின் ஜணனன்  -5
மஞ்சள் சூடி, மாலை சூடி செம்பவள வண்ண பட்டு கட்டி
மணமக்களை மகாவிஷ்ணு  மகாலட்சுமி என பாவித்து 
இன்றைய திருமணங்கள் நிறைவேற அன்று அவர்களின் 
அவதாரங்கள் பொறி அள்ளி போட்டு அக்னி  வலம் வந்து 
ஏழு அடி எடுத்து என்றும் பிரியேன் என வாக்கும் தந்து 
அம்மி மிதித்து அருந்ததி பார்த்து மாலை மாற்றி செந்தூர
திலகம் இட்டு மங்கள நான் சூடி செம்பங்கய  நாயகியை 
ஜனகர் பெற்ற திருமகளை தாரமாய் ஏற்றார் ராமபிரான் 
அண்ணன் வழி பின்பற்றி தம்பியரும் இல்லறம் புகுந்தனர்.-33

உலகளந்த பெருமாள் அபயம் அருளும் அரங்கன் இன்று
அவருக்கே தம் மகளாய் அவதரித்த லட்சுமி தேவியை 
சீதை எனும் கோதையை தன் உயிராய் வளர்த்த பாவையை 
தாரை வார்த்து கொடுத்து இணையில்லா சுகம் பெற்றார்
நிமி எனும் தன் மூதாதையன் நிமித்தம் பெற்ற மிதிலையின் 
வேதாந்தம் விளங்கப் பெற்ற வைதீக நாட்டு கோமான் ஜனகன்
மண்ணில் முளைத்த செங்கமலம் மைதிலி அவள் அயோத்தியின்
மூத்த வாரிசை மணமுடித்து தம்பதியராய் வந்த நிற்க காண 
கண்கள் செய்த தவப்பயனை நெஞ்சுருக நின்று மகிழ்ந்திருந்தார்.-34

தம் திருமகள் பிறை நெற்றியில் ராமரின் குங்குமம் சூடி 
கழுத்தினில் அவர் மங்கள நான் ஆரமாய் அலங்கரிக்க 
சிரம் கவிழ்ந்து அகம் மகிழ்ந்து ஆனந்தமாய் கணவருடன்
கரம் கோர்த்து நின்ற தருணம் தாம் செய்த தவப்பயன் 
இங்கே பூரனமானதாய் பெரும் மகிழ்வுடன் உணர்ந்தார் 
தம் மகள் தக்க தோள்களிலே பூமாலையாய் தவழ்ந்திருப்பால் 
புருசோத்தமன் இதயத்திலே கமலமாய் மலர்ந்திருப்பாள்
தம்பதியர் இவர்தாம் என்று இலக்கணமாய் இருந்திடுவாள் 
என உணர்வு பொங்க உவந்து நின்றார் ஜனக மகா ராஜா -35

சடங்குகள் முடிய சம்ப்ரதாய முறைகள் ஓய விருந்துகள்
விதவிதமாய் விருந்தோம்பல் குறையாமல் நடந்தேற 
ஜனகர் குல பிறந்த மகள்கள் விடைபெறும் நேரமும் 
விரைந்தே வந்தது மங்கைகள் தம் புக்ககம் புகவென 
பெண் வீட்டு சீர் வரிசை சிறப்புடன் அடுக்கப் பெற்றது 
மிதிலை நகர் சிறப்பு பெற்ற ஆடை ஆபரணமும், அவர் 
அங்கம் தழுவ அணைத்து பொன்னும் மணியும் முத்தும்
 வைரமும் ரத்தினமும் அவர்களுகென்ற வடிக்கப்பட்ட 
அத்தனையும் அயோத்தி செல்ல தருணம் நோக்கி நின்றது -36

பெற்று வளர்த்த பொற்கொடிகள் வளர்ந்து நின்றது 
மாற்றான் தோட்டத்தில் மனம் பரப்ப வளைந்து நின்றது 
தக்க துணையுடன் சேர்த்த மகிழ்வு ஒருபுறம் தம் 
மகள்களை பிரியும் துக்கம் ஒருபுறம் என ஜனகர்
இரட்டை நிலை கொண்ட இயபினறாய் அன்று அயர்ந்து 
நின்றார் புலம் பெயர வந்த பூங்கொடிகள் தம் மக்கள் 
என அறிந்திருந்தாலும் அந்த தருணமது எதிர்வரும் போது
எல்லா கட்டுகளும் உடைக்கப் பெற்று கட்டவிழ்ந்தார்
தாரை தாரையாய் கண்ணீர் மாலை உதிர்த்து நின்றார்-37

இன்று அவர் நிலை  மிதிலையின் மன்னவராய் இல்லை 
சுனைனையின் மனாளனையும் இல்லை தன் மகள்களுக்கு 
தந்தையாய் உருகிநின்றார் உணர்வு பெருக்கில் உழன்றார் 
பதின்வருடங்கள் வளர்த்த தம் மகள்கள் தம்மை விட்டு
பிரிந்து செல்வதற்காய் வருந்தி நின்றார் பின் வருத்தம் 
கூடாது என்று தம்மை தாமே திருத்தி வாழ்த்தி நின்றார் 
அயோத்தி மன்னரிடம் மகளுக்காய் வணங்கி நின்றார் 
மருமான்கள் கைபிடித்து  கண்மனிகளுக்காய் கலங்கி நின்றார்-38

மிதிலை மண்ணினில் இருந்து வந்த மங்கை அதை 
விடுத்து அகன்று சென்றாள் தமை வளர்த்த தந்தை 
வீடு விட்டு புகுந்த வீடு நோக்கி புறப் பட்டாள் சீதை 
அன்னைதந்தை அவள் வந்த பூமியையும் வணங்கி
அன்பு பாசம் நேசம் தந்து அனைத்தும் தந்த தந்தை 
அவள் இல்லாமல் வாடும் நிலை கண்டும் இதுவே 
மங்கையரின் உண்மை நிலை என உணர்ந்து என்றும்
அவர் புகழ் காத்து சீதை புராணம் உள்ளவரை ஜனகர்
புகழ் இந்த புவனம் முழுதும் பாடும் என புறப்பட்டாள்-39



No comments:

Post a Comment