ஜானகியின் ஜணனன் -8
அயோத்தி மாநகரை அந்தகாரம் சூழ மன்னவன்
இல்லா மாளிகையாக மங்களம் இழந்த ராணிகள் மூவர்
மனத்துயர் அடைந்த அவர் தம் மருமகள் மூவர் என
அந்தப்புரம் அலங்காரம் விடுத்த அணங்காய் மாற
அரசவை நடந்த இடமும் ஆரண்யம் நோக்கி செல்ல
புத்துணர்வு தொலைத்த பூந்துகில் பெண் போல் அயோத்தி
பசலை நோய் கொண்ட யுவதியாய் துவண்டு நின்றது
கண் கொண்ட காண சகியாத நிலை கண்டு மிதிலை
மன்னவரும் வேதனை சுமந்து வைதீக தேசம் வந்தடைந்தார்.-61
ஜனகாபுரியில் ஸ்தூல தேகம் கொண்டிருந்தாலும்
சூக்கமமாக தம் மக்கள் வாழும் அயோத்தியில் மனம்
மறந்திருந்தார்,அளவற்ற மகிழ்வுடன் வாழ்ந்து வந்த
அயோத்தி அலங்கோலமாய் நின்றதை நினைத்திருந்தார்
வேர் இழந்த கொடி போல் வாடி நின்ற கைகேயி பச்சாபதுடன்
தனித்திருக்க கணவனை பிரிந்த ஊர்மிளை ஊனப்பட்ட மனம்
கொண்ட ஊமையாய் சமைந்திருந்தாள் பக்குவப்பட்ட சுமித்திரை
தன் மனம் தேறி தவமாய் பெற்ற தலைமகனை கானகம்
அனுப்பி அரற்றி வரும் தமக்கை கோசலையை தேற்றி நின்றால்-62
ஜனகாபுரி பெற்றெடுத்த மற்றுமிரு செல்வா புத்திரிகள்
மாண்டவி தம் மனாளனின் மதியில் தீரா ரணமாய் உரசி
உரசி வேதனை விம்மி வெடிக்கசெய்யும் நிந்தையை
வீண்பழியை விரட்டி அடித்தாலும் பரதன் உள்மனதில்
ஈரேழு வருடம் வாடி வதைக்கும் அவதியை அழிக்க
வகை அறியாமல் தம் தமக்கையின் கடும் தவ வாழ்வின்
சிரமத்தையும்,தங்கை ஊர்மிளை தவிக்கும் நிலை கண்டு
இவை அனைத்தும் தீர்க்கும் மருந்து பதின் நான்கு வருட
கையாளாக காத்திருப்பே என விதியை கடிந்து நின்றால் -63
ஜனகாபுரி குலக்கொடிகளில் கடைகோடி ஸ்ரதகீர்த்தி
கீர்த்திமிக்க சத்ருக்கனை சம்ஹாரம் செய்யும் சக்கரத்தின்
அவதாரம் சத்ருக்கனனை மனந்த தாரம்.மனதார தம்
மூத்தோர் அனைவர்க்கும் சேவை செய்து அவர் துயரத்தில்
சிறிதேனும் சிதறடிக்க இயலுமோ என்று சிந்திக்கும் பாவை
மதியூக மந்திரி சுமித்திரைக்கு வாய்த்த நல் மருமகள்
அயோத்தி அரண்மனை வாய்த்த அத்தனை மருமகள்களும்
அவரவர் துயரத்தில் உழன்று கொண்டிருக்க அவர்களை
தேற்றி திக்கொன்று தூரத்தில் தென்படுவதை உணர்ந்தவர்கள்-64
கடந்தது ஈரேழு வருடங்கள் கடும் யுகங்களாக நடந்தது
சூர்பனகை மூக்கறுப்பு அதன் விளைவாய்மாயமான் அவதரிப்பு,
ஜானகியின் ஆர்பரிப்பு அண்ணலின் மான்வேட்டை,மாயமான் அபயக்குரல்
இளவலின் எடுத்துரைப்பு,அண்ணியின் மறுதுரைப்புஅரக்கனவன்
சிறையெடுப்பு,அண்ணன் தம்பி அலைகழிப்பு அனுமன் அவன் அர்பணிப்பு ,
வாலியின் வதைப்பு ,அனுமன் அலைகடல் பயணம்,கணையாழி தூது
அசோகவனம் தீ எரிப்பு,அஞ்சனை மைந்தன் அரக்கனுக்கு தூது விடுப்பு
சுக்ரீவன் துணை கொண்டு,குரங்குகளின் போர் அணிவகுப்பு ,அரக்கர்களின்
ஆணவம் அழிப்பு ,சீதையின் தீக்குளிப்பு முடிந்து வந்தது அந்நாள்.-65
ஈரேழு வருடம் கடந்து வரும் நாளில் தமையன் தக்க
தருணத்தில் அயோத்தி எல்லை அடியெடுத்து வைக்க
தவறினால் அக்னியை அரவனைபேன் என்ற பரதன்
சூளுரைக்க அயோத்தி மாநகரமே எல்லையில் கூடியது
ஆயிரமாயிரம் நயனங்கள் காணா தவம் செய்த தருணம்
ராமனின் அயோத்தி வருகை ஆவலுடன் அனைவரும்
குழுமி இருக்க காலம் கடந்து கொண்டிருக்க கலக்கம்
கொண்டது கூடியிருந்தவர் உள்ளங்கள்,பரதன் தமையனை
காணாமல் அகினி ஸ்நானம் செய்ய ஆயத்தம் செய்தான்-66
மாயை சூழ்ந்த மதியினை மாற்றவரும் திருவருள் போல்
அந்தகாரம் ஆட்சி செய்த அயோத்தி மாநகருக்கு ஒளி தர
வானில் இருந்து வையகம் வந்து இறங்கியது ஒரு விமானம்
அது ஒரு புட்பக விமானம் புவனம் போற்றும் கோமகனை
இலங்கை தீவு விட்டு தனையனிடம் சேர்க்கவென வந்தது
மருகி நின்ற மாதாக்கள் திருவயிற்றில் பால் வார்க்கவென
உருகி நின்ற ஊர்மிளை நாயகனை சேர்க்கவென பித்து
கொண்டு சீதையை பெற்ற மனம் மகிழ்வுரவென வந்தது
வானத்தில் இருந்து தரை இறங்கியது அரக்கன் அவன் வானூர்தி-67
பெற்ற பொழுதின் மகிழ்ந்திருந்த இன்பம் மனதின் பன்மடங்காய்
தம் தங்கமகள் வருகையை கன்னுற்றிருந்தார் சீரத்வாஜா ஜனகர்
பிரிவு துயர் பிரிந்து சென்றது சாகத் நகர் விட்டு தற்காலிகமாய்
வனவாசம் சென்ற வசந்தமும் திரும்பி வந்தது ரகு குலத்திற்கு
ஈரேழு வருடம் தடைப் பட்ட ராமர் பட்டாபிசேகம் நடந்தேறியது
ராஜா ராமன் செங்கோல் ஏந்தி மணி மகுடம் தரித்து பக்கத்தில்
மனையாள் உடன் அமர்ந்து மங்களம் எங்கும் பொங்க இனிமை
எவ்விடமும் வளைந்தோட சதங்கை கட்டிய கோமகள் போல்
அரண்மனை நகைப்பு ஒலி எதிரொலிக்க சோபையுடன் மின்னியது.-68
தரணி ஆள வந்த மகள் தக்க இடம் பெற்றுவிட்டால் ராமரின்
தோள் சேர்ந்து மணக்கும் மாலையாய் மணிமகுடம் தரித்து
மங்கையர் போற்றும் மாதர்குல மாணிக்கமாய் தசரதன்
மருமகளாய் ரகுகுலம் கொண்டு குலமகளாய் அவர் வம்சம்
தழைக்க தன் சூலில் கருக்கொண்டு தாய்மை நிலை நிற்கின்றாள்
பூரித்தது ஜனகர் உள்ளம் தகப்பனாய் பட்டம் கொண்டவர் இன்று
பாட்டனாய் பதவி உயர்வு கொள்கின்றார் மிதிலை நகர் வந்த
அந்த செய்தி செவியுற்ற பொழுதினில் இருந்து தம் மகளுக்கு
மருந்து கொடுத்து,மடி நிரப்பி, வளையல்பூட்டி வாழ்த்த புறப்பட்டார் -69
ராமருடன் காடு சென்று ராமகாதை தந்து ஆணவம்
கொண்ட பத்து தலை அரக்கனவன் ஆருயிர் வதைக்கவென
அவதரித்த அரங்கன் அவன் பத்தினியை வளர்த்தெடுத்த
அருமைதந்தை ஜனகருக்கு ஆனந்த வாழ்த்து கூறுவோம்
ஈரேழு ஆண்டு கண் விழித்து பிரம்மச்சர்யம் காத்தவனே
மாயாவி இந்திரஜித்தை வதைக்க இயலும் என்ற வரத்திற்கு
வாய்ப்பு தந்து தன் துயர் சகித்த ஊர்மிளையின் தகப்பனுக்கு
ஊர் கூடி வந்தனம் செய்வோம்.மனத்துயர் மாயசிறையில்
மயங்கி நின்ற மன்னவனை தாங்கி நின்ற மாண்டவியின்
பெரிய தகப்பனுக்கு பெரும் நன்றி தாங்கி நிற்போம்.-70

No comments:
Post a Comment