தனஞ்செயன்-திண்ணன்.
முன்னவன்,அஷ்தினாபுரத்தில் பாண்டவரில்
ஒருவனாய் அவதரித்தான்,
பின்னவன்,பொத்தப்பியில்,வேடவர்
குலத்தில் வந்துதித்தான்,
ஒருவனாய் அவதரித்தான்,
பின்னவன்,பொத்தப்பியில்,வேடவர்
குலத்தில் வந்துதித்தான்,
குந்தியின் வயிற்றில்,இந்திரன் அம்சமாய்
விஜயன் வந்தான்,
தத்தையின் கருவில்,செய்த தவத்தின் பலனாய்
திண்ணன் அமர்ந்தான்.
விஜயன் வந்தான்,
தத்தையின் கருவில்,செய்த தவத்தின் பலனாய்
திண்ணன் அமர்ந்தான்.
பாண்டுவின் குலம் செழித்திட,தர்மம் காத்திட
அவன் இருந்தான்,
நாகனின்,குலம் உயர்ந்திட,பக்தியின் சிறப்பு வெளிப்பட
இவன் வந்தான்,
,
அன்று ,அருகினில் பார்த்தனுக்கு சாரதியாய்
பரந்தாமன் உடன் இருந்தான்,
இன்று,மலை கடவுளாம் குமரக் கடவுள்
அருளினால் திண்ணன் வந்தான்.
அவன் இருந்தான்,
நாகனின்,குலம் உயர்ந்திட,பக்தியின் சிறப்பு வெளிப்பட
இவன் வந்தான்,
,
அன்று ,அருகினில் பார்த்தனுக்கு சாரதியாய்
பரந்தாமன் உடன் இருந்தான்,
இன்று,மலை கடவுளாம் குமரக் கடவுள்
அருளினால் திண்ணன் வந்தான்.
துரோணரின் நேர் பார்வையில் அஸ்திர,
பயிற்சியினை அவன் பெற்றான்,
ஏழுநாள்,விழா கொண்டாடி ஆசிரியன் அமர்த்தி
வேட்டையாடும் வகை அறிந்தான்,
பயிற்சியினை அவன் பெற்றான்,
ஏழுநாள்,விழா கொண்டாடி ஆசிரியன் அமர்த்தி
வேட்டையாடும் வகை அறிந்தான்,
அதர்மத்தை வெல்ல,பாசுபதா அஸ்திரம் வேண்டி
அர்ஜுனன் தவமிருந்தான்,
வேட்டையில் களைத்து,காளத்தி மலை ஏறியதும்
தெய்வ அருள் பெற்றான்,
அர்ஜுனன் தவமிருந்தான்,
வேட்டையில் களைத்து,காளத்தி மலை ஏறியதும்
தெய்வ அருள் பெற்றான்,
திரி புறம் எரித்த சிவனாரை ,நிஷ்டையில் நிறைத்து
கடும் தவம் புரிந்தான்,
மலை உச்சியில் ,தனித்திருந்த,ஏக நாயக்கரை கண்டு
மனம் சிலிர்புற நின்றான்,
கடும் தவம் புரிந்தான்,
மலை உச்சியில் ,தனித்திருந்த,ஏக நாயக்கரை கண்டு
மனம் சிலிர்புற நின்றான்,
விஜயன் தவத்தினை சோதிக்க,பன்றி ஒன்று வந்தது
விரைந்து அவனிடம்,
காளத்தி மலையை திண்ணன் அடைய,பன்றி ஒன்று
வேட்டை பொருளாய் உற்றது.
விரைந்து அவனிடம்,
காளத்தி மலையை திண்ணன் அடைய,பன்றி ஒன்று
வேட்டை பொருளாய் உற்றது.
பன்றியின் மேல் அம்பினை எய்தி,முடித்த நொடி
வேடவன் வடிவில் ஈசனார் வந்தார்.
திண்ணன்,ஈசனை அடைய இன்று முடியும் பொருளாய்
வந்ததும் பன்றி தான்.
வேடவன் வடிவில் ஈசனார் வந்தார்.
திண்ணன்,ஈசனை அடைய இன்று முடியும் பொருளாய்
வந்ததும் பன்றி தான்.
விஜயன்,வேடனே இப்பன்றியை கொன்றது யான்
என்று வாதம் செய்தான் அன்று
திண்ணன் ,வேடனாய் வந்து எம்பிரான் அவனை பார்த்து
களித்திருந்தான் இன்று,
என்று வாதம் செய்தான் அன்று
திண்ணன் ,வேடனாய் வந்து எம்பிரான் அவனை பார்த்து
களித்திருந்தான் இன்று,
துவந்தயுத்தம் செய்து பின் தான் யாரென,காட்டி
அருள் செய்தார் அர்ஜுனனுக்கு,
இன்று தன கண்ணில்,இருந்து குருதி பெருக்கி,
அவன் யாரென காட்டினார் உலகிற்கு,
அருள் செய்தார் அர்ஜுனனுக்கு,
இன்று தன கண்ணில்,இருந்து குருதி பெருக்கி,
அவன் யாரென காட்டினார் உலகிற்கு,
விடையானை,கண்ட விஜயன்,தான் விரும்பிய,
அஸ்திரம் மறந்து நின் அன்பே வேண்டும்
என யாசகம் செய்ய,அன்பனே அதனை யாம் அடுத்த
நின் பிறப்பினிலும் தந்து,முக்க்தியைதருவேன்,
அஸ்திரம் மறந்து நின் அன்பே வேண்டும்
என யாசகம் செய்ய,அன்பனே அதனை யாம் அடுத்த
நின் பிறப்பினிலும் தந்து,முக்க்தியைதருவேன்,
இதோ இப்பொழுது நீ வேண்டிய பாசுபதா அஸ்திரம்
என வழங்கி,அதன் பின்,வேடனே என்று,அழைத்த
நீ மறுபிறப்பில் வேடனாய் எமை அடைவாய் என்றும்,
பன்றி ஒன்றுநம் நடுப் பொருளாய் வந்தது,அதுவே
என வழங்கி,அதன் பின்,வேடனே என்று,அழைத்த
நீ மறுபிறப்பில் வேடனாய் எமை அடைவாய் என்றும்,
பன்றி ஒன்றுநம் நடுப் பொருளாய் வந்தது,அதுவே
அடுத்த பிறவியில் நின்னை என்னிடம் சேர்க்கும் என்றும்,
அருளிய சிவனார்,இப்பிறவியிலும் தவறாது,
தன் திருவருள் ஈந்து,கண்ணில் குருதி பெருக்கி,
அவரின் பக்தி ஸ்ரத்தையை உலகினுக்கு உணர்த்தி,
அருளிய சிவனார்,இப்பிறவியிலும் தவறாது,
தன் திருவருள் ஈந்து,கண்ணில் குருதி பெருக்கி,
அவரின் பக்தி ஸ்ரத்தையை உலகினுக்கு உணர்த்தி,
பின் ஆட்கொண்டு என்றும் நீ என் அருகே,
வலப்புறத்தில் மாறுபாடு இன்றி நிலைத்திருப்பாய்
என்று பத முக்தியும் தந்தனர் இறைவனாரே!
வலப்புறத்தில் மாறுபாடு இன்றி நிலைத்திருப்பாய்
என்று பத முக்தியும் தந்தனர் இறைவனாரே!


No comments:
Post a Comment