ஜானகியின் ஜணனன் -7
வண்ணம் உதிர்த்த வெறும் சுவர் போலே,நாகம் ஒன்று
கவ்வி நின்று சந்திரனை விழுங்கி இருள் கவிழ்ந்த இரவு
ஒன்றை அயோத்தி நகருக்கு தந்தார் போல் கிரகணம்
பீடித்த, கைம்பெண்கள் வாழும் நகராய் கலை இழந்தது
மன்னவன் இல்லா மாளிகை ஆனது அயோத்தி மாநகர்
சோக நிலையும் கடந்து வெற்றிடத்தை வெறித்திருந்தது
அவ்விருள் சூழ்ந்த நகரினுள் சிறு தீபம் ஒன்றை கொண்டு
ஒளியடைய செய்யும் முயற்சி போல் ஆதரவு மொழிகள்
சுமந்து கனத்த மனதுடன் அடியெடுத்து வைத்தார் ஜனகர்.-56
ராணி மார் பேட்டி காண தம் பத்தினியுடன் சென்று அவர்கள்
தாள இயல துக்கத்தில் தாமும் பங்கு பெற்றுகொண்டார்
ராணி மார் இருவர் மட்டும் அங்கிருக்க கைகேயி தன்
மகனாலே திரச்காரம் செய்யப்பட செய்தியும் அறிந்தார்
இழந்தது பேரிழப்பு அதை ஆறுதல் மொழியாய் ஆயிரம்
பகர்ந்தாலும் தேறிவருதல் சிரமம் என அறிந்து அவ்விடம்
விட்டு தம் இளையமகள் இருப்பிடம் நோக்கி பெயர்ந்தார்
துருதுறுப்பின் அவதாரம் கலகலப்பின் அடையாளம் தன்
இளைய செல்வமகள் ஊர்மிளை கண்டு அதிர்ந்தார் -57
தவக்கோலம் கொண்டு மூத்த மகள் கட்டியவன் பின்
தொடர ஆரண்யம் சென்று அவதியுருவாளே என
இக்கணம் வரை மனம் குமைந்து நொந்தவர் இன்று
அண்ணலை பின்தொடர்ந்து இளவலும் சென்றதனால்
அவன் மனையாளாம் தம் மகள் படும் துயர் கண்டு
பிரிவு துயர் தந்த அதிர்ச்சியில் அடையாளம் காண
இயலா வடிவு மாற்றம் கொண்ட தம் குலக்கொடியை
தன் மன்னவன் தொலைத்து வாடி வதங்கி நின்ற
மலர் கொடியை கண்டு கண்ணில் குருதி கொண்டார்.-58
அருந்தவ புதல்விகளை அலங்கார பூஷிதைகளாய்
அயோத்தி அனுப்பி வைத்து அமைதியுடன் இளைப்பாறிய
அவர் இனி ஒருபோதும் சலனமின்றி அமர்வதென்பது
அரிதிலும் அரிதானது கானகம் சென்ற ஜானகியின்
காடுமேடு அலைந்து திரியும் கொடுமை ஒருபுறமெனின்
அரண்மனையே ஆரண்யமானது ஊர்மிளைக்கு மறுபுறம்
கானகம் என்றாலும் கணவனுடன் சென்றால் சீதை
அரண்மனை என்றாலும் அரவணைக்கும் அவன் கரம்
இன்றி கரைந்து நின்றால் உத்தமர் பெற்ற ஊர்மிளை-59
பகீரதன் செய்த தவபயன் எல்லாம் தவறியதோ
அரிச்சந்திரன் சத்தியம் இன்று சரிவர பயன் தராதோ
ரகுலம் செய்த மாபாதகம் தான் என்ன குலம் தழைக்க
தயரதர் புத்திர வேள்வியுற்று பெற்ற ரத்தினங்கள்
மறஉரி தரித்து கானகத்திலும் நாட்டு எல்லையிலும்
தவமிருக்க அவர் குல மங்கையர் எல்லாம் வருந்தி
வசம் இழந்து நின்றது ஏன் என அயோத்தி சார்பாய்
விதிவழி இணைந்த தம் மக்கள் சார்பாய் விதியை
நொந்து விடை தெரியா விந்தையுடன் விடை பெற்றார்-60

No comments:
Post a Comment