ஜானகியின் ஜணனன் -6
ஜனகர் குலம் பெற்ற திருமகள்கள் ரகுகுலம் சிறக்க
குலமகள்களாய் குடி புகுந்தனர் அயோத்தி நகரில்
ராணிமார் மூவரும் ஆழம் சுற்றி அரண்மனைக்கு
அன்புடன் தம் மருமகள்களை வரவேற்க அயோத்தி
மாந்தர் பூக்கள் சொரிந்து புனியம் பல பெற்றனர்
சதங்கை ஒலி வளையொலி நகை ஒலி பொருந்தி
புன்னகை அரசி அந்த அரண்மனை முழுதும் தம்
பூரண ஆசியால் அரசாட்சியை சிறப்புடன் செய்தாள்
பாசநேசமுடன் பந்தங்கள் ஒன்றிணைந்து பரவசித்தது-40
கங்கை நதியோரம் தம் செல்வமகள் நினைவோடு
மனதில் கல்யாண கடமை முடித்த களிப்போடு
கடந்து வந்த சுப தினங்களின் நினைவு சுவடோடு
அகம் மகிழ்வுடன் பிரிவு துயரம் தந்த சிறுதுயருடன்
தம் மகள்கள் சென்ற திசையில் மனதையும் செலுத்தி
மங்கலம் பொங்கும் இல்லறவாழ்வில் புத்திரிகள்
இன்னல் எதுவும் இன்றி இனிது துவங்க இறைவனை
வேண்டி தம் மனதார ஆசிகளையும் அனுப்பிவைத்தார்
வாயு பகவான் சுமந்து சென்று மகளிடம் சேர்ப்பார் என.-41
கடந்து மாதங்கள் உருண்டு ஓடியது காலங்கள்
அயோத்தி மன்னவரிடம் இருந்து அவசர செய்தி
நெஞ்சம் படபடக்க மஞ்சத்தில் இருப்பு கொள்ளாமல்
அவசரமாய் வினவினார் தூதுவனிடம் என்னவென்று
மன்னவர்க்கு வெற்றி சுப செய்தி சுமந்து வந்தோம்
என தூதுவன் வயிற்றில் அமுதமென பால்வார்க்க
ஆரம் கழற்றி பரிசளித்தார் செய்தி அறியும் முன்னே
தயரதர் விடுத்த ஓலை விரைந்து வரசொல்லிஅது
அடுத்து வரும் சுப தினத்தில் ராமர் பட்டாபிசேகம்-42
ரகு வம்சம் சுமந்த செங்கோலும் மணிமுடியும்
பகீரதன் வழி வந்த அரரசாட்சியும் அரிசந்திரன்
அமர்ந்து ஆண்ட அரியணையும் ஹரி அவனின்
அவதார புருசராம் ராஜாராமன் பதம்நாடஇருப்பதை
பகிர்ந்தது அயோத்தி அரசன் அனுப்பிய ஓலை
ராமருடன் தம் அருமை மகள் மாதரசி சீதை
மணி முடி தரித்து மன்னவன் அருகமர்ந்து
அரசாட்சி செய்யும் திரு கோல காட்சியை தம்
அகக்கண்ணில் முன்னோட்டமாய் கண்டார்.-43
ஓலை வந்த வேளை முதல் ஒவ்வொன்றாய்
பட்டு பீதாம்பரம் ஒளி பொருந்திய மணிகள்
ஆடை ஆபரணம் என அண்ணலுக்கும் அவர்
மனம் மகிழ் தன் மகள் மைதிலிக்கும் என
வரிசை வரிசையாய் பரிசுபொருட்கள் பல
சேர்த்தார் அதை அழகுபட தம் மனையாள்
கரம் கொண்டு அலங்கரிக்க செய்தார் அவற்றை
சுமந்து வர அசைந்து வரும் ஆணை அம்பாரி
உருண்டு வர குதிரை ரதம் என ஒன்றிணைத்தார்-44
பரிவாரம் சூழ அயோத்தி நகர் நோக்கி புறப்பட்டார்
ஓலை செய்தியில் இவர் செல்லும் முன்னரே
பட்டாபிசேகம் முடிந்திருக்கும் என்ற சேதி எனவே
தம் மகள் சக்ரவர்த்தினியாய் செங்கோல் செய்யும்
நாட்டில் சம்பந்தியாய் உட்புகும் ஆனந்தம் கொண்டு
தம் மகள் பட்டமகிசியாய் இருக்கும் காட்சியினை
வழி நெடுக சிந்தையில் நிறுத்தி களித்திருந்து அகம்
கண்டு இன்புற்ற காட்சி இன்னும் சில பொழுதில்
நிஜமாய் கண் காணும் என கனா கண்டு வந்தார் -45
தம் செல்வ மகளை சில காலம் பிரிந்திருந்தார்
அத்தனை ஆவலையும் நயனத்தில் தேக்கி ஆசை
தீர அவள் அமுத முகம் காண முன்னேறினார்
மனாளனுடன் மகிழ்ந்திருக்கும் அவள் மேனி
ஒளி பொருந்தி மின்னும் முக லாவண்யத்தை
கண்டு காணாத பொழுதையெல்லாம் ஈடாக்க
என எண்ணம் கொண்டு ஆர்வமுடன் வந்தார்
சிரித்த அவள் முகம் செந்தாமரையாய் மலர்ந்து
காந்தி வீசும் கனிமுகத்தை கண்குளிர காண வந்தார் -46
அயோத்தி நகர் எல்லை வரை எல்லை இல்லா இன்பம்
கொண்டு மகிழ்ந்த மன ஓட்டத்திற்கு தடை போட்டது
அரை கம்பத்தில் பரந்த ரகு குல கொடி, கோமகன்
துடித்து சேவகன் ஒருவனை விரைந்து சென்று
செய்தி சேகரித்து வர சொல்ல அதற்கும் அவசியம்
இன்றி அழுது சொரிந்த கண்கள் சிவக்க சில நகர்
மாந்தர் இளைய ராணியை நிந்திதபடி வந்தனர்
சோகம் கப்பிய அவர் தேகம் சொன்னது வேண்டாத
செயல் ஒன்று அயோத்தியில் அரங்கேறி இருப்பது -47
இடி போல் ஒரு செய்தி இதயத்தில் அடியாய் விழ
அது தாங்கும் முன்னே அடுக்கடுக்காய் நில நடுக்கம்
போல் மிதிலை நகர் கோமகன் தலை வந்து விழுந்தது
செவியுற்ற கொடும் செய்தி சரிதானோ இல்லை என்
செவிபுலத்தில் இயற்கையாய் ஏற்பட்ட குறைபாடோ
என அதிர்ந்து மற்றுமொருமுறை கவனமுடன் தன்
செவிமடுத்தார் ஆயிரம் வேண்டுதல்களுடன் ஜனகர்
விதி தேடி வழி பிடித்து அயோத்தி நகர் சேர்ந்த தருணம்
அவதார புருஷனே இடம் கொடுக்க நாம் யார் இடர் செய்ய -48
செவியுற்ற செய்தி மீண்டும் நினைவில் நிறுத்தினார்
தயரத சக்ரவர்த்தி அதிர்சியில் உயிர் துறந்தார் அது
யாதெனில் எனில் ராமன் கானகம் சென்றதனால்
ராமன் தன் மனையாளுடனும் இளையானுடனும்
புறப்பட்டான் ஈரேழு வருட வனவாசம் ஆற்றவென
இந்த கொடுமை நடக்க காரணம் யாதென வினவ
அது உம பகையாளி தேசமாம் கேகேயன் நாட்டு
கொடும்காளி கைகேயி கைங்கர்யம் என மாந்தர்
வெறுப்புடன் விருப்பின்றி வார்த்தையாடி மறைந்தனர் -49
ஆவி துடித்து அமர்ந்து விட்டான் மிதிலை மன்னவன்
அன்பு மகள் ஆசை முகம் காண ஆவலுடன் வந்த அவர்
அத்தனை ஆசைகளும் நிராசை உற்றதே என நிந்தித்தார்
மண்ணின் மகளை மனதார காண வந்தேன் கானகம்
அவளை அழைத்ததுவே என கரைந்து அமர்ந்து விட்டார்
அதுவும் பதின்வருடம் பக்குவமாய் வளர்த்த மகளை
இன்னும் பதின் வருடம் சென்றே பின்னே சந்திக்க இயலும்
எனும் பொழுது இதற்கெனவோ நான் புத்திரி சுகம் பெற்றேன்
என தன்னை தானே வெந்து நொந்து நின்றார் ராஜரிஷி-50
அயோத்தி நகர் செல்ல வந்த வேகம் என்ன வழியிலே செய்தி
கேட்டு நின்ற தேகம் என்ன என அழுது புலம்பி நின்றார்
யாருக்கும் வாய்க்காத தெய்வப் பிறவி என் மருமானாய்
தந்தை சொல் மிக்க மந்திரமில்லை என்ற தயரத ராமா
தாய் மனம் தவித்து மகிழ்ந்துருகும் கோசலை ராமா
அயோத்தி மக்கள் மனம் கவர்ந்த அன்பு சாகேத் ராமா
அவனியில் அனைவரயும் அன்பாய்ஆதரிக்கும் அனந்தராமா
என் அன்புமகள் ஆவியோடு அமர்ந்த சீதாராமா உன்னை
குறையாய் கூட சொல்ல ஒரு மொழி இல்லையே என்னிடம் -51
மார்த்றான் தாய் வரம் கேட்க்க அது உன் சாபமாய் மாற
தவித்த உன் தந்தை பாக்கியவானாய் சொர்க்கம் சேர
விதிக்கும் துணை செய்வேன் என துணையுடன் புறப்பட்ட
தூயவனே உன்னை தூற்றவும் எனக்கு ஒரு காரணம்
இல்லையே என் செய்வேன் எவ்வாறு எனை நானே
தேற்றிக் கொள்வேன் ஆனந்தமாய் உன்னோடு இல்லறம்
நடத்தி என் மகள் நல்லறம் செய்யும் காட்சி காண வந்தேன்
உம்மை காணவும் முடியாமல் கானகம் அழைத்ததுவோ
மறுவீடாய் செல்ல உனக்கு கானகம் தான் வாய்ததுவோ-52
ரிஷி முனிவர் குலாமுடன் ஞான சர்ச்சை செய்யவென
எம்மை போல் நீரும் வேதாந்தம் அறியவென ஆரண்யம்
சென்றீரோ காடு மேடு திரிந்தாலும் ராமனுடன் வாழ்வு
வேண்டுமென என் செல்வமகள் பிரார்த்தனை தான்
கைகேயி வரம் உருவாய் வந்து வழியனுப்பி வைத்ததுவோ
உழவு செய்து பெற்றமகள் என்றபோதும் வெயில் படாமல்
ஒயிலாய் வளர்த்த மகள் கரடு முரடு பாதையை எவ்வாறு
கடந்து செல்வாள் மானோடு விளையாடிய பைங்கொடி
வன விலங்கோடு எப்படி போராடுவாள் என பதைத்து இருந்தார்-53
அயோத்தி வரை வந்து விட்டு அரண்மனை செல்லாமல்
முடியாது என முன்னேறிய பொழுது ரகுலம் பஞ்சவடி
செய்து திரும்பிய செய்தியும் சேர்ந்து வந்தது அதன் படி
அயோத்தி ராஜ்யமே சென்று அழைத்த போதும் கைகேயி
மனம் மாறி காலடியில் விழுந்து கதறி கரைந்த போதும்
தந்தை சொல்லை மந்திரமாய் கொண்ட கோதண்ட ராமன்
ஈரேழு ஆண்டு முடியும் முன்னே தாயகம் திரும்பேன் என
உறிதியுற உரைத்த செய்தியும் அதுவரை நாடாள அவர்
பாதுகையை பெற்று வந்த பரதனின் மாண்பும் அறிந்தார்-54
ஆரவாரமாய் அயோத்தி புறப்பட்ட மன்னன் ஆசுவாசமாய்
தம் மகள்களுக்கும், மற்ற இரு மருகருக்கும் அவரை பெற்ற
தன் துணையை இழந்து வாழும் ராணியற்கும் மொழி சொல்ல
என தன்னை தானே தேற்றி கொண்டு வேதாந்தம் பயின்று
ராஜரிஷி என்ற பட்டமும் தந்து தம்மை ஆட்டுவிக்கும்
இறைவனின் செயலை நொந்து இதற்கும் ஒரு காரணம்
உண்டு அது முடிந்த பின்னே அவனி அறியும் அதை என
பற்று விட்டு பண்பட்ட மனிதராக அமைதியுற்ற அயோத்தி
நகர் அரண்மனைக்குள் மன துக்கத்துடன் பிரவேசம் செய்தார் -55

No comments:
Post a Comment